Tamil News
Tamil News
Friday, 02 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

கோர ரயில் விபத்து

ஒடிஷா மாநிலம் பலசூர் மாவட்டத்தில் உள்ள பகனாக பஜார் பகுதியில் நிகழ்ந்த கோர ரயில் விபத்துக்கு இந்தியாவையே உலுக்கி உள்ளது. பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மற்றும் சரக்கு என மூன்று ரயில்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளாக்கி நாட்டை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது வரை விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை அயிரத்தை நெருங்கியுள்ளது. 
 

மீட்புபணியில் தமிழ்நாட்டு அமைச்சர்கள் 

இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில், காயமடைந்த தமிழர்களை மீட்க விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவானது ஓடிசா விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும்,  ஒடிசா பேரிடர் மீட்புப் படையும் 24 தீயணைப்பு குழுவும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அங்குள்ள உள்ளூர் வாசிகளும் காயமடைந்தவர்களை மீட்க மீட்பு படையினருக்கு உதவி புரிந்து வருகின்றனர். அதனுடன், விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

பாஜக உதவிக் குழு ஒடிசா பயணம் 

இந்நிலையில், பலசூர் ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு அழைத்து வரவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், பாஜக உதவிக்குழுவானது ஒடிசாவுக்கு செல்ல உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.