Tamil News
Tamil News
Sunday, 04 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

2 நாட்களுக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்பட்டது. 

நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தால் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து பாதைகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மீண்டும் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு வந்தது. நேற்று வரை 90 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56ஆக குறைக்கப்பட்டது.

2 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்

இந்நிலையில் ரயில் வழித்தடங்கள் சீரமைக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து விபத்து நடைபெற்ற பகுதி வழியாக முதல் ரெயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விரைவு ரெயில் காலை 10:45 மணிக்கு இயக்கப்பட்டது. 3 மணி நேரம் 45 நிமிட தாமதத்தில் இந்த ரெயில் இயக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் 

காலை 10.45 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில், விஜயவாடா, ராஜமுந்திரி விசாகப்பட்டினம் வழியாக ஆந்திராவை கடந்து ஒடிசாவின் பிரம்மப்பூர், புவனேஸ்வர் மற்றும் பதராக் ஆகிய பகுதிகளின் வழியாக விபத்து நடைபெற்று இருப்புப் பாதை சீரமைக்கப்பட்ட பாலசோரைக் கடந்து கொல்கத்தாவின் ஷாலிமர் ரெயில் நிலையத்தை நாளை சென்றடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.