Tamil News
Tamil News
Monday, 05 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

50 ஓவர் மற்றும் டி20 போட்டியை போன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் உலகக் கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தி போட்டிகளை நடத்தி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இறுதிப் போட்டியில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் மொத்தம் 12 போட்டிகளில் விளையாட வேண்டும். அதில் 6 போட்டிகள் உள்நாட்டிலும், 6 போட்டிகள் வெளிநாட்டிலும் விளையாட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும், வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளும் டை அல்லது ட்ராவில் முடிந்தால் 1 புள்ளியும் வழங்கப்படும், அதே போன்று  தொடரை முழுமையாக வெல்லும் அணிகளுக்கு போனஸ் புள்ளிகளும் வழங்கப்படும். அதன்படி அதிக புள்ளிகளை பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். 

ஐபிஎல்லில் கலக்கிய இந்திய விரர்கள்

அந்தவகையில், முதல் இடத்தை பிடித்த ஆஸ்திரேலியாவும், இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவும், இறுதிப் போட்டியில் மோத உள்ளன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட்கோலி, சட்டீஷ்வர் புஜரா, ரஹானே ஆகியோரு பேட்டிங்குக்கு நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளன. இவர்களுடன் ஐபிஎல்லில் கலக்கிய ருதுராஜ், ஷுபமன் கில், சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும், ஜடேஜா, உமேஷ் யாதவ், மொஹம்மது சிராஜ், ஷமி, உனட்கட்,  ஆகிய அனுபவமிக்க வீரர்களும் அணியில் இருப்பது இந்தியாவின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ஐசிசி போட்டிகளிலும் ஆதீக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா 

அதேபோல், ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், மற்றும் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அனைத்து ஐசிசி போட்டிகளிலும் ஆதீக்கம் செலுத்தும் அணியாக ஆஸ்திரேலியா இன்றளவும் விளங்கி வருகிறது. அந்த அணியில், டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரீஸ்,  லபஸ்சங், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். மேலும், கேமரூன் க்ரீன், மிட்செல் மார்ஷ்,  மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், பேட் கம்மின்ஸ் அகிய உலகத் தரம் வாய்ந்த பவுலர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.  அதேபோல், ஸ்காட் போலண்ட், டூட் முர்ஃபி, மாட் ரன்ஷாவ் ஆகிய இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வார்னர், ஸ்மித், கவாஜா, ட்ராவிஸ், மைகேல் நேசர், ஜோஷ் இங்லீஷ், ஆகிய அனுபவமிக்க வீரர்கள் அதிகளவில் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கிட்டத்தட்ட இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது.