Tamil News
Tamil News
Wednesday, 07 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

சர்ச்சைக்கு உள்ளாகும் ஆளுநர் ரவி

அண்மைக் காலமாக ஆளுநர் செயல்பாடுகளுக்கு திமுக அமைச்சர்கள் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சுமத்தி வருகின்றனர். சமீபத்தில் முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்தது மற்றும் சிதம்பரம் கோவில் குழந்தை திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் கருத்துக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு முதலமைச்சர் உள்பட மூத்த அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் பலர் கடும் கண்டனத்தை பதிவு செத்திருந்தனர். 

பட்டம் பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு

இந்நிலையில், பல்கலைக் கழக விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்; பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார்; இதன் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர். 

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட விரும்புகிறாரா?

கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தர் தேர்வு செய்ய 2022ம் ஆண்டு அக்டோபரிலேயே குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பியது; ஆனால், ஒப்புதல் அளிக்காமலேயே ஆளுநர் இருக்கிறார். கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தரை தேர்வு செய்ய மூவர் குழுவை கடந்தாண்டு அக்டோபரிலேயே அரசு அமைத்தது; ஆனால், யு.ஜி.சி. சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திக்கிறார்; அப்படி ஒரு விதியே இல்லை சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட விரும்புகிறாரா? - என அமைச்சர் பொன்முடி ஆளுநர் மீது கடுமையான குற்றச்சாட்டு கூறியுள்ளார்.