Tamil News
Tamil News
Wednesday, 07 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம்  தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் K.சங்கர்  அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருச்சி காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர், திருச்சி மத்திய மாவட்ட காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், திருச்சி காவல்துறை ஆணையர் (தெற்கு) செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த போதைப் பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் 1000 திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மாணவர்கள் காவல்துறையாக செயல்பட வேண்டும் 

இந்த கூட்டத்தில்  தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் K.சங்கர் பேசுகையில், போதை பொருளை ஒழிப்பதற்காக மாணவர்களாகிய நீங்கள் காவல்துறையினராக செயல்பட வேண்டும். போதைப் பொருள்கள் புழக்கத்திற்கு வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் போதை பொருள் தேவை ஏற்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் தகவல் கொடுக்க வேண்டும்

போதைப்பொருள் டிமாண்ட் இருப்பதால்தான் அதனை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அனைவரும் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியினை ஏற்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் குறித்து காவல்துறைக்கு கட்டாயம் தகவல் கொடுக்க வேண்டும். என கூறினார். 

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாணவர்

அதன் பின்னர் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக பள்ளி மாணவர்கள் உரையாற்றினார் அப்பொழுது ஒரு மாணவர் பேசுகையில்., போதை பொருளை ஒலிக்க வேண்டும் என்றால் முதலில் மதுவை ஒழிக்க வேண்டும் தமிழக அரசால் மதுவை ஒழிக்க முடியவில்லை இதனால்தான் காவல்துறையினர் மாணவர்களாகிய நம்மிடம் வந்து இருக்கிறார்கள் நாம் நினைத்தால் முடியும் நாம் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இது குறித்து கூற வேண்டும்.  என அம்மாணவர் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.