Tamil News
Tamil News
Wednesday, 14 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நீதிமன்றக் காவல்

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி, நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். மேலும் அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.

மூன்று மனுக்கள் மீதான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடியநிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை நிராகரிக்க வேண்டும் என்ற ஒரு மனுவும், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரிய மனுவும், அமலாக்கத்துறையினர் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவும் விசாரிக்கப்பட உள்ளது. இந்த மூன்று மனுவும் சென்னை மாவட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி தலைமையில் விசாரிக்கப்பட உள்ளது.

அதிர்ச்சி கொடுத்த அல்லி.!

இந்தநிலையில், அந்த மூன்று மனுக்கள் மீதான விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தற்போது சென்னை மாவட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி வழங்கியிருக்கிறார். தீர்ப்பில், ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை ரிமாண்டில் வைத்திருப்பதால் அந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி அல்லி. 

இந்த தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், மற்ற மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும்நிலையில், எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.