Tamil News
Tamil News
Wednesday, 14 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

செந்தில் பாலாஜி கைது - விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடியநிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை நிராகரிக்க வேண்டும் என்ற ஒரு மனுவும், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரிய மனுவும், அமலாக்கத்துறையினர் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி

அந்த மூன்று மனுக்கள் மீதான விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தற்போது சென்னை மாவட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி வழங்கியிருக்கிறார். தீர்ப்பில், ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை ரிமாண்டில் வைத்திருப்பதால் அந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். 

காவிரிக்கு மாற்ற அனுமதி

இதையடுத்து, செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரிய மனு மீதான விசாரணை நடந்து முடிந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. செந்தில் பாலாஜி மனைவியின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். சிகிச்சையை அமலாக்காத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். 

நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும்

அடுத்ததாக, இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிய மனுவில், நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். மேலும், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஜூன் 22க்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். 

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆளுநர் சந்திப்பு

இப்படி பரபரப்பான அரசியல் சூழலில், இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர் அதிமுகவினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சற்று நேரத்திற்கு முன்பு மனு அளித்திருக்கின்றனர். இது திமுகவிற்கு மேலும் இருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், முறைகேடாக ரூ.30,000 கோடி சேர்த்ததாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரியும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். 

ஏற்கனவே, திமுக அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக கூறி, அதிமுகவினர் பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், இன்று ஜூன் 15ம் தேதி மாலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்திருப்பது தமிழக அரசியல் களம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.