Tamil News
Tamil News
Friday, 16 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

விஜய் மக்கள் இயக்கம் 

விஜய் மக்கள் இயக்கம் அண்மைக்காலமாகவே மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், செயல்பாடுகள் என தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தலைவர்களுக்கு மரியாதை செலுத்துதல், ரத்ததானம் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் என மக்களை குஷிப்படுத்தும் வகையில் ஆல் ரவுண்டிலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வந்தது. 

பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் கல்வி விருது விழா

இந்தநிலையில், நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து கெளரவப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அதற்கான அறிவிப்புகள் வெளியாகி இன்று ஜூன் 17-ம் தேதி அந்த நிகழ்ச்சியானது தற்போது சென்னையில் உள்ள நீலாங்கரையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.  

குஷியில் மாணவர்கள்

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்க வசதியாக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் நேற்று இரவு அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். நடிகர் விஜய்யை பார்த்தாலே போதும் என்றும், விஜய்யை பார்த்தால் என்ன ஆவேன்னு தெரியல என்றும் மாணவ மாணவிகள் உற்சாகமாக இருந்தனர்.

விஜய் சொன்ன டயலாக்

தற்போது நிலாங்கரையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு தடபுடல் விருந்து தயாராகி வருகிறது. நிகழ்ச்சியில், அசுரன் படத்தில் வரும், “இடம் இருந்தா புடங்கிடுவானுங்க, காசு இருந்தா புடுங்கிடுவானுங்கா.. ஆனா.. படிப்பை மட்டும் யாராலும் யார்கிட்ட இருந்தும் புடுங்க முடியாது” என்ற வசனத்தை நடிகர் விஜய் கூறியிருந்தது மாணவர்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

மாணவி நந்தினிக்கு விஜய் கொடுத்த கிப்ட்

மேலும், அந்த நிகழ்ச்சியில், மாநிலத்திலே 12-ம் வகுப்பில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவிக்கு, நடிகர் விஜய் வைர நெக்லஸ் அளித்த சம்பவம் மக்கள் மத்தியில் பிரம்மிப்படைய செய்திருக்கிறது. மேலும், 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாற்றுத்திறனாளி மாணவனை, நடிகர் விஜய் நிகழ்ச்சி மேடையில் இருந்து கீழே இறங்கி அந்த மாணவனுக்கு சால்வை போத்தி, அந்த மாணவனுடன் போட்டோ எடுத்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொறுப்புணர்ச்சி வந்ததுபோல உணர்கிறேன்

மேலும், நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்கள் நடிகர் விஜய்யின் புகைப்படங்களை வரைந்து வந்து நடிகர் விஜயிடம் காண்பித்து தங்களுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், “என் மனசுல ஏதோ ஒரு பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததுபோல உணர்கிறேன் என்றும், மாணவர்களைப் பார்த்து நீங்கள்தான் இந்தியாவின் வருங்கால தூண்கள் என்றும் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களாக பார்க்கப்படுகிறது.