Tamil News
Tamil News
Sunday, 18 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பிராமணர்களுக்கு என்று தனிக்கட்சி தொடங்கப்படுவதாகவும், அதில் பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்றும் நடிகரும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எஸ்.வி.சேகர் Vs அண்ணாமலை

நடிகரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான எஸ்.வி. சேகருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்கள். இது ஒரு சரித்திர நிகழ்வு. நாசிக்கள் எந்த அளவுக்கு யூதர்களை வெறுத்தார்களோ அந்தளவுக்கு திராவிட கும்பல் பிராமண வெறுப்பை கடைப்பிடித்து வருகிறது. இதை நான் ஏஎன்ஐ செய்தி நிறுவன பேட்டியிலேயே தைரியமாக சொல்லியிருக்கிறேன்.

இதை சொல்ல எனக்கு எந்த வித அச்சமும் கிடையாது. பிராமணர்களை தேடித்தேடி வேட்டையாடினீர்கள், மிரட்டினீர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தீர்கள். எத்தனையோ பேர் கடவுள் மீது பக்தியுடனும் மரியாதையுடனும் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நல்லவர்களாக உள்ளனர். பிராமணர்களை வைத்து தமிழகத்தில் ஒரு பெரிய அரசியலே நடக்கிறது. இவை அனைத்தையும் உடைத்து நொறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என பேசியிருந்தார்.

இதையடுத்து, ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.வி சேகர், "நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பை கொண்டு, மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேசவைக்கைப்பட்ட ஓட்டு வங்கி" என்று அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார்.

பிராமணர்களுக்கு என்று கட்சி தனிக்கட்சி

இந்தநிலையில், பிராமணர்களுக்கு என்று கட்சி தனிக்கட்சி உருவாகிறது என்று பேசியிருக்கிறார் எஸ்.வி.சேகர். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; "தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கென்று ஒரு கட்சி உருவாகிறது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்றுவிட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் பிராமண வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள். பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓட்டளித்தால் போதும். ஜெயிக்கிறோம் என்பது விஷயம் அல்ல என்று பேசினார். 

பாஜகவில் இருந்து விலகிவிடுவேன்

மேலும், தமிழ்நாட்டில் பிராமணர்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திடமே இல்லாதபோது, 48 லட்சம் பேர் இருப்பதாக பிராமணர்கள் கருதுகிறார்கள். இதில் 30 லட்சம் போனாலும், மீதி உள்ள வாக்குகள் தமிழகத்தில் 2026 தேர்தலில் தன்னுடைய சாதியினுடைய குரலை ஒலிப்பதற்காக குறைந்தது 8 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வருவார்கள். அதற்க்கான முயற்சிதான் இது. இது எந்த ஜாதிக்கும் எதிரானது கிடையாது என்றும், இதற்கெல்லாம் உத்வேகம் கொடுத்தது டாக்டர் ராமதாஸ் அவர்கள். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு பிரதமர் மோடியிடம் சொல்லிவிட்டு பாஜகவில் இருந்து விலகிவிடுவேன்" என்று பேசினார்.