Tamil News
Tamil News
Wednesday, 21 Jun 2023 00:00 am
Tamil News

Tamil News

செந்தில் பாலாஜி கைது 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14--ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அமலாக்கத்துறை காவலில் செந்தில் பாலாஜி

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரியது. அந்தவகையில், 15 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டநிலையில், 8 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி, 8 நாட்கள் காவல் முடிந்து ஜூன் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. 

செந்தில் பாலாஜிக்கு திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக இஎஸ்ஐ மருத்துவர்கள் சோதனையில் கண்டுபிடித்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். மேல் அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரிய வழக்கில் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜூன் 21-ம் தேதி அதிகாலை இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில்

அதனடிப்படையில் திட்டமிட்டபடி, சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகாலை 5.15 மணியளவில் இதய அறுவை சிகிச்சை தொடங்கியது. செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை சுமார் 4 முதல் 5 மணி நேரம் நடைபெற்றது. மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். காவேரி மருத்துவமனையில் 7-வது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜி சில நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் செந்தில் பாலாஜி இருப்பார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பொய் சத்தியம் செய்த சவுக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை நிறைவு பெற்றதாகவும், கண்காணிப்பில் இருப்பதாகவும் சரியாக காலை 10.15 மணியளவில் காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திட்டமிட்டபடி, பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்தநிலையில், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறாது என்று திட்டவட்டமாக கூறியதை, நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஆபரேஷன் சத்தியமா நடக்காது

அந்த யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் பேசியதாவது, "எந்தவொரு கைதையும் ஒரு ஏஜென்சி தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிப்பதற்கு முதல் 15 நாட்களில் மட்டும்தான் முடியும், 15 நாள் காவல் முடிந்த பிறகு ஜெயிலுக்கு போக வேண்டிய சூழல் தான். அதற்குப் பிறகு நீதிமன்றக் காவல் மட்டும் தான், ஏஜென்சி காவல் கிடையாது. அந்த 15 நாட்களை கடத்துவதற்காகத்தான் இந்த நாடகம். செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷன் சத்தியமா நடக்காது" என்று தெரிவித்திருந்தார். 

நெட்டிசன்கள் கலாய்

காவேரி மருத்துவமனை தரப்பில் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான நிலையில், சவுக்கு சங்கரை நெட்டிசன்கள் புரட்டி எடுத்து வருகின்றனர்.