Tamil News
Tamil News
Sunday, 25 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

கூடுதல் விலைக்கு மதுபானம்

தமிழ்நாடு டாஸ்மாக் மதுவை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் கூடுதல் வசூலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

கிரிமினல் நடவடிக்கை

மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் நிர்ணயம் செய்யபட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் தவறான முறையில் பதிவு செய்ய கூடாது என்றும் மீறினால் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.