Tamil News
Tamil News
Monday, 26 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த ஜூன் 22-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பாணு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை தொடங்கியது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்,ஆர். இளங்கோ தங்களுடைய தரப்பு வாதத்தை முன்வைத்தார். 

ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு, அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கப்பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். கைது குறித்து தகவலும், காரணங்களையும் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை. கைதுக்கான காரணத்தை தெரிவிப்பது குறித்து, அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார். 

சட்டப்பூர்வ கைதாக இருந்தால் ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஆகையால், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

காரசாரமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கையை ஏற்று, செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

அதனடிப்படையில், இன்று ஜூன் 27-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மீதான விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பிலும், செந்தில் பாலாஜி தரப்பிலும் தங்கள் வாதங்களை முன் வைத்து வருகின்றனர். விசாரணையில்  அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காரசாரமாக வாதத்தை முன் வைத்து வருகிறார். 

இந்த விவகாரத்தில் ஆர்கொணர்வு வழக்கு தொடர முடியாது. நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத்துறை காவலில் இல்லை. நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைது என கூற முடியாது. செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. 

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது, அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார் என்றும், நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைதாக கருத முடியாது என்றும் வாதிட்டனர். மேலும்,  கைதுக்கான ஆவணத்தை செந்தில் பாலாஜி பெற மறுத்ததற்கான ஆதாரங்கள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கையின் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை என அமலாக்கத்துறை வாதங்களை முன்வைத்திருக்கின்றனர்.