Tamil News
Tamil News
Monday, 26 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தொடர்பாக இன்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.  

காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்று தற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு எம்.பி.ஜோதிமணி, எம்.பி. செல்வக்குமார், கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி. விசுவநாதன் உள்ளிட்டோர் வரிசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால் உள்ளிட்டோருடன் இன்று ஜூன் 27 தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆலோசனை மேற்கொண்டார். 

கே.எஸ்.அழகிரி பேட்டி

காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் கே.எஸ்.அழகிரி. அப்போது பேசிய அவர்,   "தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். எனக்கு உரிய பணியை செய்வதில் மகிழ்ச்சி. பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது. தமிழக காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி. தலைவர் பதவி மாற்றம் தொடர்பான தகவல் அறிந்து டெல்லி வரவில்லை என தெரிவித்தார். 

தொடர்ந்து, தமிழகத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 72% வெற்றி பெற்றுள்ளோம். நான் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என தெரிவித்தார்.