Tamil News
Tamil News
Tuesday, 27 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தொடர்பாக டேவிட்சன் ஆசீர்வாதம் மீது வராகி என்பவர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 2018 ஜூன் முதல் 2020 ஜூலை வரை மதுரை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்தார். அப்போது வெளிநாட்டினருக்குப் பாஸ்போர்ட் வழங்கியதில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு எழுந்தது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக இந்தியன் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர் வராகி கடந்த மே மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. 

உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டநிலையில், மத்திய அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. டேவிட்சன் ஆசீர்வாதம் மீது தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடமாற்றம் செய்தநிலையில், உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக செந்தில்வேலன் கவனிப்பார் என்றும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருண் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.