Tamil News
Tamil News
Friday, 30 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசு பள்ளியில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். 

மேலும், கடந்த 2010 – 2011ம் கல்வியாண்டில் இருந்து இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தில் தொழில்கல்வி பயில்வதற்கு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதடிப்படையில், தற்போது தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் மேற்குறிப்பிட்டதை தொடர்ந்து குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.  

அரசாணை வெளியிட்டதையடுத்து, முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வதற்கும், முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளர் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மனிதவள மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.