Tamil News
Tamil News
Monday, 03 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று, 2022-2023ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் 259 மாணவர்களுக்கு ரூ.49 இலட்சம் மதிப்பீட்டிலான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

குத்துச் சண்டை குறித்து விழிப்புணர்வு

அப்போது அவர் பேசியதாவது; யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. எங்கு நடந்தாலும் தப்பு தப்புதான். தப்பை திருத்தி கொள்வதற்கு எங்களது தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் எங்களை வழிநடத்தி வருகிறார்கள். குத்துச்சண்டை பயிற்சி மையங்கள் அரசு சார்பில் திறக்கப்பட உள்ளது. கலைஞரின் கோபாலபுரம் இல்லம் பக்கத்திலேயே குத்துச்சண்டை பயிற்சி மையம் அமைய உள்ளது. குத்துச்சண்டை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் முதலமைச்சர் கோப்பை போட்டியில் நிச்சயம் குத்துச் சண்டை போட்டியும் இடம் பெறும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.