Tamil News
Tamil News
Monday, 03 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

நிதி நெருக்கடியில் திரையரங்குகள்

தற்போது திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில், ஓடிடி தளங்களின் கடுமையான போட்டியாலும் திரையங்குகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பலரும் வந்து செல்லும் திரையரங்குகள் சரியான முறையில் வசதிகளை வழங்குவதில்லை என்றும், சினிமா திரையரங்குகளில் சுத்தம் சுகாதார பிரச்சனைகள் இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டும் வருகிறது. இந்நிலையில், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது. 

கட்டண விவரம்

மல்டிபிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ. 200 ஆகவும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 120 ஆகவும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.