Tamil News
Tamil News
Sunday, 09 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் உறவினர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், சிறுவர்களுக்கு கன்னி பரிசோதனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பாக, பாலியல் ரீதியான வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரம் மற்றும் தர்மபுரியில் இளம்வயது திருமணம் தொடர்பான இரண்டு வழக்கின் விசாரணையும் இன்று ஜூலை 10 நடைபெற்றது. 

அப்போது சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீது தவறு இல்லை என்ற காவல்துறை விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த வழக்கை முடித்து வைத்தனர். இதைத்தொடர்ந்து, தர்மபுரியில் இளம்வயது திருமணம் தொடர்பான வழக்கை காவல்துறையினர் நடத்திய விதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

இதுபோன்ற வழக்குகளில் 18 வயதுக்கு குறைந்தவர்களாக இருப்பின் அவர்களை குழந்தைகளாக கருத வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆண்மைத்தன்மை சோதனை செய்வதில் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.