Tamil News
Tamil News
Thursday, 20 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

மாணவிகளுக்கு மிதிவண்டிகள்

மாநிலம் முழுவதும் 8,213 மாணவர்களுக்கும் 12,186 மாணவிகளுக்கும் என மொத்தமாக 20,399 மிதிவண்டிகளை வழங்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டம் பொன்மலைபட்டியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 448 மாணவிகளுக்கு இன்று மிதிவண்டிகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நல்ல மனிதர்கள் உருவாகும் இடம்

பின்னர் இந்நிகழ்ச்சியில் விழா பேரூரை ஆற்றிய அமைச்சர் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதலமைச்சர் மாணவ செல்வங்களிடம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய வேண்டுகோள் நன்கு உணவருந்த வேண்டும் நன்கு விளையாட வேண்டும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்பித்து நல்ல மதிப்பெண்கள் பெரும் அதே நேரத்தில் தாங்கள் கற்றுக் கொண்டதை சக மாணவர்களுக்கு சொல்லித் தந்து உதவ வேண்டும். இந்த சமூகத்தில் நடமாடும் நல்ல மனிதர்களை உருவாக்கக்கூடிய இடம்தான் பள்ளிக்கூடம் – இங்கு படித்து விட்டு செல்பவர்கள் மருத்துவர்களாக, பொறியாளராக – ஏன் கல்வித்துறை அமைச்சராக கூட ஆகலாம். பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்னென்ன வழிகாட்டுதல்களை சொல்லித் தருகிறார்களோ அதனை மாணவச் செல்வங்கள் பின்பற்ற வேண்டும் என பேசினார்.