Tamil News
Tamil News
Thursday, 20 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

வன்முறை சூழ்ந்த மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் வன்முறையால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்களின் வசிப்பிடங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரு சமூக மக்களுக்கு இடையே நிகழ்ந்த கலவரம் வன்முறையாக வெடித்த நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வருகிறது. மக்களவை இன்று கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விவாதிக்க தயார்

இதற்கிடையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இரு அவைகளிலும் மணிப்பூர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையை முடக்குகின்றனர் என ராஜ்நாத் சிங் கூறினார்.