Tamil News
Tamil News
Friday, 21 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

மேகதாது அணை அமைய உள்ள பகுதியில் ஆய்வுக்காக 29 வனத்துறை அதிகாரிகளை நியமித்தது கர்நாடக அரசு.  

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது கர்நாடகா அரசு. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கில் அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது.  

இந்தநிலையில், மேகதாது அணை அமைய உள்ள பகுதியில் ஆய்வுக்காக 29 வனத்துறை அதிகாரிகளை கர்நாடக அரசு நியமனம் செய்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்காததால் தற்போது மாற்று வழியை கண்டறிய தயாராகி வருகிறது கர்நாடகா அரசு. திட்ட அறிக்கையில் ஏராளமான மரங்கள் வெட்டப்படும் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படலாம் என்ற ஒரு விஷயம் உள்ளது. 

அதை சரி செய்ய ஏதுவாக மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற கர்நாடக அரசு மாற்று திட்டம் தீட்டுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.