Tamil News
Tamil News
Tuesday, 25 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

என்.எல்.சியின் சுரங்க விரிக்கப் பணிகள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி  நிறுவனமானது சுரங்க பாதைகளை அமைக்க திட்டமிட்டு வந்துள்ளது. இதற்காக சுற்றுப்பகுதிகளிலுள்ள நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதற்கு அப்பகுதி மக்களும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களைக் என்.எல்.சி நிறுவனமானது கையகப்படுத்தி வருகிறது. இதற்கு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு... நிரந்தர வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளையும் முன்வைத்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

விளை நிலத்தில் இறங்கிய ஜே.சி.பி

இந்த நிலையில், இன்று காலை என்.எல்.சி நிறுவனம்... வளையமாதேவி கிராமத்தில் கிடப்பில்போடப்பட்ட தூர்வாரும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு, கால்வாய் வெட்டும் பணிகளை மேற்கொள்ள கனரக வாகனங்கள், ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டுவந்து பணிகளைத் தொடங்கியது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

சலை மறியல்

மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு அந்தப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்த போலீஸார், வாகனங்களை சோதனைக்குப் பிறகே அனுப்பிவந்தனர். இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் வந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களை வளையமாதேவி கிராமத்துக்குள் அனுமதிக்காததால், திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைதுசெய்து, அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.