Tamil News
Tamil News
Friday, 28 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

திடீரென பற்றிய தீ 

கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய பேட்டையில் இயங்கி வந்த திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கேஸ் கசிவினால் தீ பற்றிய நிலையில், அருகே இருந்த பட்டாசு குடோனுக்கும் தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த தீ விபத்தில் 3 கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். 

உயிரிழப்பு அதிகரிப்பு

இந்த கோர விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி,அவரது மகன்,மகள் என 8பேர் மருத்துவமனைக்கு சடலமாக கொண்டுவரப்பட்டது அப்பகுதியில் பை எண்ணிகை 69=ப்-எபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிவராஜ் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

தலைவர்கள் கண்டனம்

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி போர்களம் போல காட்சியளித்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சரயு அப்பகுதியை ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கரும் கண்டனத்தை பதிவு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.