Tamil News
Tamil News
Thursday, 03 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

தொடர் போராட்டம் 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 8-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று வாயில் கருப்பு துணியினை கட்டிக்கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல். விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என்றும் ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8, 100 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள்

மேலும் 2016-ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.