Tamil News
Tamil News
Tuesday, 08 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டது எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முன்வைத்தனர். நேற்றைய விவாதத்தில் ராகுல் காந்தி பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசிவரை பேசவில்லை. 

கர்ஜிக்கத் தொடங்கிய ராகுல் 

இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று ஆக-09 மதியம் 12 மணியளவில் ஆரம்பித்தது. எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி பேச ஆரம்பித்தார். அப்போது பேசிய அவர், "வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி இந்தியாவின் ஒரு பகுதியாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை என்று பேசினார். 

தொடர்ந்து மக்களவையில் கர்ஜிக்கத் தொடங்கிய ராகுல், மத்திய அரசு தனது செயல்களால் மணிப்பூரை பிளவுபடுத்திவிட்டது. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவை கொலை செய்துவிட்டீர்கள். மணிப்பூரில் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடமும் பேசினேன்; அவர்களின் கதை கொடுமையானது. மணிப்பூர் வன்முறையால் பாரத மாதாவையே கொன்றுவிட்டீர்கள்.

ஒரு தாய் இங்கே இருக்கிறார்; மற்றொரு தாய் மணிப்பூரில் இருக்கிறார்; அவரை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார்; நீங்கள் (பிரதமர் மோடி) கேட்கவில்லை" என்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.    

பாஜக எம்.பி.க்கள் அமளி

இதையடுத்து, பிரதமர் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தும், வடகிழக்கு மாநிலங்களை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசுகிறார் என்றும், ராகுலின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  

 திமுகவை சீண்டிய ஸ்மிருதி இராணி

இதையடுத்து, ராகுல் காந்தியின் பேச்சுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதில் அளித்து பேச தொடங்கினார். அப்போது பேசிய அவர்,"ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மிக மோசமான பேச்சை நாம் இங்கு கேட்டோம், அதை கண்டிக்கிறேன். ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான். ஊழலை பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள்.

காஷ்மீர் பண்டிட்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது. காஷ்மீர் பண்டிட்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பெரும் கொடுமைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. காஷ்மீர் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்" என்று பேசினார்.