Tamil News
Tamil News
Sunday, 20 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

நாட்டை உலுக்கிய மணிப்பூர் விவகாரம் 

வடகிழக்கு மாகாணமான மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கிடையே எழுந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்து 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், தங்களது வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். இதற்கிடையே இரு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டை உலுக்கியது. இதன் தாக்கம் குறைவதற்குள் மணிப்பூர் நிகழ்ந்த ஏராளமான குற்றம் மற்றும் பாலியல் கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வருகிறது. 

தலையிட்ட உச்சநீதி மன்றம்

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் தலையிடும் என அதன் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில், குழு அமைக்கப்பட்டு மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம், உளவியல் ரீதியிலான ஆலோசனைகள், புனரமைப்பு பணிகள், நிவாரணப்பணிகள் குறித்த அறிக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  

அறிக்கை தாக்கல் செய்த குழு

மேலும்,  அந்த அறிக்கையில், மணிப்பூரில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மொய்தி - குக்கு இன மக்களுக்கு இடையேயான மோதல்கள், நிவாரண முகாம்களின் செயல்பாடுகள் குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.