Tamil News
Tamil News
Monday, 21 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 

ஆளுநருக்கு பரிந்துரை

தமிழ்நாடு அரசுத் துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், அந்த துறைகளில்  தலைவர்கள் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் நியமனத்திற்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. அதன்மூலம், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவையும் 10 உறுப்பினர்களையும் பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. 

திருப்பி அனுப்பிய ஆளுநர்

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருமாத காலமாகியும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இந்தநிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்து அனுப்பிய கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். 

 விரைவில் பதில்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனவும், நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 

தொடர்ந்து தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது இந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.