Tamil News
Tamil News
Tuesday, 29 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

அதிகார துஷ்பிரயோகம்

இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதாக அந்த குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. 

வேலைக்காக பணம் கொடுத்தவர்களின் மதிப்பெண்கள் சட்டவிரோதமாக திருத்தப்பட்டும், பென்சில்களால் மதிப்பெண்கள் குறிக்கப்பட்டு இருப்பதும் அவர்களுக்கு பணி ஆணைகள் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சோதனையில் எடுக்கப்பட்ட பென்டிரைவில் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் இடையே பண பரிவர்த்தனை நடந்தது குறித்த விவரங்களும் கிடைத்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அமைச்சரின் அதிகாரத்துடன் சதி

அதுமட்டுமல்லாமல், எம்டிசி, டிஎன்எஸ்டிசி ஆகிய போக்குவரத்து கழகங்களில் பணியமர்த்திய ஆணைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முக்கியமாக, 3000 பக்கங்கள் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அமைச்சரின் அதிகாரத்துடன் சதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.