Tamil News
Tamil News
Tuesday, 05 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

இந்தியா கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி, இடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

I.N.D.I.A கூட்டம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கூட்டணியின் பெயர் தான் இந்தியா கூட்டணி. இந்த கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளனர். இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அண்மையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 

ஒருங்கிணைப்புக் குழு

அந்தக் கூட்டத்தில் தான் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அந்த ஒருங்கிணைப்புக் குழுவில் திமுகவிலிருந்து டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் லல்லக் சிங், ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சி சார்பில் ஜாதவ் அலிக்கான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முக்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

இந்தநிலையில், இந்தியா கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் வரும் 13-ம் தேதி  நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை ஆலோசிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.