Tamil News
Tamil News
Friday, 08 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

கர்நாடகா பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு என எடியூரப்பா கூறியதற்கு குமாரசாமி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகிறது. அதேவேலையில், தேசிய கட்சிகளுடான கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அந்தந்த மாநில கட்சிகள் தேசிய தலைவர்களுடன் பேசி வருகின்றனர். 

சட்டசபை தேர்தல்

அந்தவகையில், கர்நாடகா மாநில கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளை செய்து வருகிறது. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடந்து முடிந்தது. அதில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகள் பெற்று அதிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றது. அதையடுத்து, பாஜக 66 தொகுதிகளிலும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.   

பாஜகவுடன் மஜத கூட்டணி.?

சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ம.ஜ.த. தோல்வியடைந்தநிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்க்கான வியூகங்களை வகுத்து வருகிறது. அதனடிப்படையில் தான் பாஜக கூட்டணியில் ம.ஜ.த.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு என எடியூரப்பா நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பாஜகவும், ம.ஜ.த.வும் கூட்டணி அமைத்துவிட்டன என்று செய்திகள் வெளியாகின. 

குமாரசாமி மறுப்பு.!

இந்தநிலையில், பாஜக கூட்டணியில் குமாரசாமியின் ம.ஜ.த.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு என எடியூரப்பா கூறியதற்கு குமாரசாமி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பற்றி அவர் தெரிவித்ததாவது; மக்களவைத் தேர்தல் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது; ஆனால் தொகுதிப்பங்கீடு முடியவில்லை. எடியூரப்பாவை இரண்டொரு முறை சந்தித்துள்ளேன், 4 தொகுதிகள் என முடிவாகவில்லை. 28 தொகுதிகளில் 4 தொகுதிகள் ஒதுக்கீடு என எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என குமாரசாமி தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் பாஜக மற்றும் ம.ஜ.த. கூட்டணி முடிவாகவில்லை என்பது உறுதியாகிறது.