Tamil News
Tamil News
Monday, 09 Oct 2023 12:30 pm
Tamil News

Tamil News

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது பினாமி பெயரில் கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 2002 சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, அதைத்தொடர்ந்து தற்போது எம்.பி.ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என தொடர்ந்து அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், எம்.பி. ஆ.ராசாவின் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.