Tamil News
Tamil News
Wednesday, 16 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

சென்னை அணி நிர்வாகத்துடனான மனகசப்பு காரணமாக ஐபிஎல் 2023 தொடருக்கான சென்னை அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  பிளேயர் ரீட்டெயின் லிஸ்டில்  மீண்டும் ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 


சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னாலே, அதன் கேப்டனாக தோனியை தாண்டி வேறு ஒரு நபரை சென்னை ரசிகர்களால் சிந்திக்க கூட முடியாது. ஆனால், தோனி ஓய்வு பெற்றால் சென்னை அணியை வேறு யார் வழிநடத்துவார் என்ற கேள்விகளும் இருந்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் புதிய கேப்டனாக  களமிறங்கினார் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா. அவரது தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து தோல்விகளே சந்தித்துக் கொண்டிருந்ததால், ரசிகர்களும் சரி அணி நிர்வாகமும் சரி ஜடேஜா மீது அதிருப்தியில் இருந்தது. 

இந்திய அளவில் அதிகப்பட்ச ரசிகர்களை கொண்ட சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜடேஜா கேப்டன்சியில் மட்டும் கோட்டைவிடவில்லை, அவர்  பந்துவீச்சிலும் சோடைபோனார். இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்குள்ளாகி ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டார் ஜடேஜா. இதனை சரி செய்யும் பொருட்டு, அதுவரை பிளேயராக இருந்த தல தோனி, களத்தில் நின்று முடிவுகளை எடுக்கும் கேப்டனாக மீண்டும் உருவெடுத்தார். அப்போதில் இருந்தே சென்னை அணி நிர்வாகத்துக்கும், ஜடேஜாவிற்கும் கருத்து வேறுபாடு எழத் தொடங்கி, ஐபிஎல் 2022 தொடர் முடிவடைந்ததும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான அத்தனை புகைப்படங்களையும் நீக்கும் அளவிலான மனகசப்பு உருவானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இனி ஜடேஜா சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்றும், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகலாம் என்றும் கூறிவந்தனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இதை மறுத்தாலும், ஜடேஜா எந்த விளக்கமும் கொடுக்காமலே இருந்து வந்தார். 

இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் பிளேயர் ரீட்டென்ஷனுக்கு முன்பாக ஜடேஜாவிடம் பேசிய தல தோனி, அவரை கூல் செய்து, சென்னை அணியில் ஜடேஜாவை மீண்டும் ரீட்டெய்ன் செய்ய வைத்துள்ளார். இதற்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், தோனிக்கு தலைவணங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜடேஜா. 


அதில், தல தோனிக்கு முன் ஜடேஜா தலையை குனிந்து மரியாதை செலுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன், “அனைத்துமே சிறப்பாக தான் உள்ளது. மீண்டும் தொடங்கலாம்” (Everything is Fine, #Restart) என்று பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் செம்ம குஷியில், இம்முறை சென்னை தான் கோப்பையை வெல்லும் என்று தெரிவித்து வருகின்றனர்.