Tamil News
Tamil News
Thursday, 24 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

தனது தொகுதியான சென்னை கொளத்தூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொளத்தூர், வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ.19.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜம்புலிங்கம் பிரதான வீதியிலிருந்து குமரப்பா சாலை வரை ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் ஜி.கே.எம் காலனி 24 வது தெருவிலிருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை ரூ.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து

வீனஸ் நகரில் ரூ.7.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மேயர் ஆர்.பிரியா,து.மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.