Tamil News
Tamil News
Friday, 25 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

தமிழ் சினிமாவுல பாட்டுக்கு பஞ்சமே இல்ல. எம் எஸ் விஸ்வநாதன் ஆரம்பிச்சி, இளையராஜா, ரஹ்மான், தேவா தொடங்கி இன்னைக்கு அனிருத் வரைக்கும் ரசிகர்களுக்கு தினமும் இசை மழை தான்

அப்படி தமிழ் சினிமாவுல, இளையராஜா இசைல, மழைல படமாகபட்ட பாடல்களும், மழை சார்ந்த பாடல்களையும் பற்றி இந்த கட்டுரைல பார்கலாமா?

மேகம் வந்ததோ – மௌன ராகம்
 
மணிரத்தினம் படங்கள ட்ரெயின்’நும் ரெயினும் கண்டிப்பா இருக்கும். அப்படி ஒரு சூப்பர் பாட்டுதான் மேகம் வந்ததோ. ரேவதியின் துள்ளலான டான்ஸ்’ல இளையராஜாவின் இசை அருவியில் உருவான ஒரு சூப்பர் ஹிட்டான பாட்டு.


 பொத்துக்கிட்டு ஊத்துதடி - பாயும் புலி

மீண்டும் இளையராஜா. மீண்டும் மழை. மீண்டும் ஒரு துள்ளாலான பாட்டு. ரஜினி-ராதாவின் இளமை பொங்கும் காதலுக்கு ஒரு தூதுவனாய் பொழியும் மழையில், இளையராஜாவின் இசைக் கருவிகள் இளமைக்கு பலம் சேர்க்கும் அழகே அழகு.
 
மேகம் கொட்டட்டும் – அந்த ஒரு நிமிடம்

மழைக்கு ஒரு anthem சாங்கா அமைஞ்சது  இந்த பாட்டு. 
1980கள்ல, தொடங்கி இன்னிக்கு வரைக்கும்  மழைய பாத்தாலோ இல்ல அத பத்தி நினைச்சாலோ, இந்த பாட்டு நம்ப நினைவுக்கு உடனே வரும். அதிலும் கமலோட ஆட்டமும் பாட்டமும், டிஸ்கோ லைட்ஸ்யும், இதுக்கு எல்லாம் மேல இளையராஜாவோட லைட் மியூசிக்கும் அட டா..  கேட்க கேட்க ஆனந்தம் தான்.
 
அந்தி மழை வானம் – நாயகன்
 
ரொம்ப சீரியஸா இருக்குற வேலு நாயகர கொஞ்சம் குஷி படுத்தி, அவர ஆட்டம் பாட்டம்  போடா வச்ச பாட்டு தான் அந்தி மழை வானம். வழக்கம்போல இளையராஜாவோட இசைவெள்ளம் வானத்திலிருந்து பூமிக்கு மழை ரூபத்துல வந்தது மாதிரி ஒரு உணர்வு.

 

பொன் வானம் பன்னீர் – இன்று நீ நாளை நான் 

ஒரு விதயாசமான கதைக்கு, ஒரு வித்தியாசமான situation-ல ஒரு அற்புதமான பாட்டு. ராஜாவோட இசைக்கு இலை-கொடி எல்லாம் அசைவது போல ஒரு haunting  melody. எவ்வளவு வெயில் காலத்துலையும்  இந்த பாட்ட கேட்டா, மனசு மட்டும் இல்ல உடம்பே சில்லுனு ஆகுற மாத்ரி ஒரு பீல் குடுக்குற பாட்டு.

வான் மேகம் – புன்னகை மன்னன்
 
மௌன ராகம் படத்துல மேகம் வந்ததோ பாட்டுல மழையில ஆடம் போட்ட அதே ரேவதி, இயக்குநர் இமயம் பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்துல அதே மாதிரி ஒரு மழை பாட்டுக்கு, ஆடி பாடிய பாட்டு தான் வான் மேகம். இதுவும் ராஜாவின் கைவண்ணத்தில் வந்த இன்னொரு அற்புதமான மழை பாட்டு  

தகிட ததுமி – சலங்கை ஒலி 

ஒரு பக்கம் மழை, ஒரு பக்கம் எஸ்.பி.பியின் குரல், ஒரு பக்கம் இளையராஜா, மற்றொரு பக்கம் கமலோட நடிப்பு – Wow..! what a deadly Combo.! 
பொண்ணுக்கு ஏத்த  மாப்பிள்ளை அமைவது போல, situation-க்கு ஏத்த ஒரு பிரமாதமான combination அமைஞ்சது இந்த பாட்டுக்குனு சொல்லலாம்
காதலின் வலியை உள்வாங்கி பாடும் எஸ்.பி.பி.யை ரசிக்கிறதா.. இல்ல அதை  இசை வடிவத்துல குடுத்த ராஜாவின் மெட்ட ரசிக்றதானு எல்லோருக்கும் ஒரு குழப்பமாக தான் இருக்கும் 

சின்ன சின்ன  – செந்தமிழ் பாட்டு 

இளையராஜாங்குற ஒருத்தரே rain situation-க்கு பாட்டு போட்டாக்க அல்லும், இங்க கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா மாதிரி, அவர் கூட எம்.எஸ்.வீயும் களத்துல குதுச்சி ரெட்டை சந்தோஷம் குடுத்த பாட்டு சின்ன சின்ன தூறல் பிரபுவின் எஷ்ப்ரெஸ் பாட்டுக்கு இன்னுமொரு ஸ்பெஷல் அடிசன்.