Tamil News
Tamil News
Friday, 25 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் முடிவடந்தை 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை 1 -0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. இதில், முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். நிதானமாக ஆடிய இந்திய ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 50 ரன்னிலும், ஷிகர் தவான் 72 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 15 ரன்னிலும், அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்நிலையில், ஷ்ரேயஸ் அய்யருடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடிய நிலையில், சாம்சன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னில் ஆட்டம் இழக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன், சவுதி தலா 3 விக்கெட்டும் , மில்னே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின் ஆலன் 22 ரன்னிலும், டிவோன் கான்வே 24 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து களம் இறங்கிய டேரில் மிட்சேல் 11 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நியூஸிலாந்து தள்ளாடிய நிலையில், கேப்டன் வில்லியம்சனுடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் நியூஸிலாந்தின் ரன் ரேட் அதிகரிக்க தொடங்கியது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய லாதம், அரைசதம் கடந்தபின் அதிரடி காட்டினார். அவர் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்சருடன் 145 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு பக்கபலமாக நின்று ஒத்துழைப்பு தந்த கேப்டன் வில்லியம்சன் 94 ரன்கள் குவித்தார். இதனால் முடிவில் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.