Tamil News
Tamil News
Sunday, 27 Nov 2022 11:30 am
Tamil News

Tamil News

ஐபிஎல் டி20 விளையாட்டிற்காக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  

ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக் கொண்டனர். இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியை காண 1,01,566 பார்வையாளர்கள் மைதானத்தில் கலந்து கொண்டனர். 

BCCI Guinness Record: जानें कितने लोगों ने नरेंद्र मोदी स्टेडियम में IPL  2022 का फाइनल देखा था

இந்நிலையில், இப்போட்டியில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் பங்கேற்றதால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் ஐபிஎல் டி-20க்காக கின்னஸ் உலகசாதனையில் இடம்பிடித்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், “இந்தியர்கள் அனைவர்க்கும் இது பெருமையான தருணம். ரசிகர்களின் ஈடு இணையற்ற ஆர்வம் மற்றும் ஆதரவுக்கு நன்றி” என பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. 

https://twitter.com/JayShah/status/1596822586679504897?s=20&t=2ebKN9erpEU2C91gJrfVGw

இந்த சாதனையை பற்றி பகிர்ந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “பிரம்மாண்டமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அதிகம் பேர் (101,566 பேர்) ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.  இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி” பதிவிட்டுள்ளார்.