Tamil News
Tamil News
Tuesday, 29 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுகு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில், திருச்சி மாவட்டத்தில் காட்டூர், பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், “வானவில் மன்றம் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அறிவுசார் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில், 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாணவர்கள்  மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்ட முதல்வர் அவர்களு பாராட்டும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் சென்றடைந்த முதலமைச்சர் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில்பூங்காவை திறந்து வைத்ததுடன் இத்தொழில் பூங்காவில் அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்க்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். அத்துடன் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சரின் இந்த சுற்றுப்பயணத்தின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ஆ.ராசா, சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள், இனிகோ இருதயராஜ், கதிரவன், மா.பிரபாகரன், கே.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.