Tamil News
Tamil News
Tuesday, 29 Nov 2022 11:30 am
Tamil News

Tamil News

கூண்டுக்கிளி

இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர்  சேர்ந்து நடித்திருப்பார்கள். ஒரு சமயம்,  படபிடிப்பின் போது  சிவாஜியின் காட்சி முடிந்தவுடன் உடனடியாக அங்கிருந்து  கிளம்பிவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் வருவார்.

குழப்பத்தில் எம்.ஜி.ஆர்

இதை கவனித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஏன் இப்படி செய்கின்றார் என்று அவருக்கு ஒரே குழப்பம். உடனே  இயக்குனரிடம் இதை பற்றி விசாரித்தார். இயக்குனர் ராமன்னவும் எம்.ஜி.ஆர் அப்படி விசாரித்ததாக சிவாஜியிடம் சொல்லிருகிறார். 

சிவாஜியின் பதில்

அதற்கு, சிவாஜி “எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பது  பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால்   படப்பிடிப்பின்   போது   புகைப்பிடித்தால் அங்கு எம்.ஜி.ஆர் இருப்பார், அவர் முன் எப்படி புகைபிடிப்பது? எனக்கு சங்கடமாக இருக்கும் அவருக்கும் அது அவமரியாதையாக இருக்கும். அதனால்தான் நான் தனியாக வந்து புகைப்பிடித்து விட்டு மீண்டும் படபிடிப்பில் கலந்துகொள்வேன்” என்று சிவாஜி பதில் அளித்துள்ளார். 

அதை ராமண்ணா எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, சிவாஜி தன் மீது வைத்துள்ள மரியாதையை கண்டு அவருக்கு பூரித்துபோனது. 

எம்.ஜி.ஆர் - சிவாஜி நட்பு

அந்த  காலகட்டத்தில்   சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் இருவருக்குமே ஒரே அளவிற்கு தான் புகழும் ரசிகர்கள்  பட்டாளமும் இருந்தது. சிவாஜி நினைத்திருந்தால் அன்று எம்.ஜி.ஆர் முன்பாகவே புகைபிடித்திருக்கலாம். ஆனால், அவருக்கு முன்னாள்  புகை பிடித்தால் அது மரியாதையாக இருக்காது என்று அவர் எண்ணியதும்; நட்புக்கும், எம்.ஜி.ஆர் என்ற மூத்த கலைஞன் மீது அவர் வைத்திருந்த அளவுகடந்த மரியாதை தான்  காரணம்.

திரையில் மட்டும் தான் இருவரும் போட்டியாளர்கள், வாழ்க்கையில் இறுதிவரை நல்ல நண்பர்களாக, ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்புகொண்டவர்களாக இருந்தார்கள் என்பது தான் உண்மை.