Tamil News
Tamil News
Friday, 02 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சிறகுகளில் பலர், அந்த மாய உலகத்தின் வலைக்குள் சிக்கி, ஒரு கட்டத்தில் எதிர்பாராத முடிவுகளை எடுத்து தன்னைத்தானே அழித்துகொண்டுள்ளனர்.

அந்த வகையில், சின்னன்சிறு வயதில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை ஷோபனாவின் மரணம் சினிமா உலகை உலுக்கியதுமட்டும் இல்லாமல், இன்று வரை ஒரு விவாத பொருளாக தொடர்கிறது.  

அழகும் திறமையும் நிறைந்த நடிகை ஷோபாவின் வாழ்க்கை, திரைப்பட திரைக்கதை போல பல சுவாரசியங்களும், திருபங்களும் நிறைந்தவை. 

அவரது தற்கொலை தர்செயலா அல்ல தூண்டுதலா?

1980ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலகையும், ரசிகர்களையும்  மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது 17 வயதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு அந்த  அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. தமிழில் மட்டும் அல்ல, இந்தியத் திரைப்பட உலகில் மிகச்சிறந்த திறமையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஷோபாவின் வாழ்க்கை எதிர்பாராதவிதமாக தற்கொலையால் துண்டிக்கப்பட்டது. ஷோபாவின்  மரணத்திற்கு காரணமாக இருந்த சில நிகழ்வுகள் பல்வேறு விவாதங்களுக்கு  வழிவகுத்தது. ஷோபாவை, பாலுமகேந்திராதான் கொன்றுவிட்டு, தற்கொலை போல சித்தரித்துவிட்டார் என்பதும் சிலரின் குற்றச்சாட்டாக இருந்தது, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உட்பட இதையே குற்றச்சாட்டாக வைத்தனர்.

குழந்தை நட்சத்திரம் 

ஷோபாவின் இயற்பெயர், மஹாலட்சுமி மேனன். தமிழ்த்திரைப்பட வரலாற்றில், குறைந்த வயதில், குறுகிய காலத்தில், அதாவது  1977 முதல் −1980 வரை, 17 படங்களில் மட்டுமே நடித்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பெற்ற நடிகை. நடிகை சாவித்திரி போலவே, வெகுளித்தனம், துறுதுறுப்பு, செய்ய நினைத்ததை உடனே நிறைவேற்ற வேண்டுமென்ற முரட்டுப்பிடிவாதம் குணம், உணர்ச்சிக் கொந்தளிப்புத் தன்மை என பலவித சுபாவங்களைக் கொண்டவர் நடிகை ஷோபா. தனது மூன்றாது வயதில் குழந்தை நட்சத்திரமாக, பிரேம்நசீர் நடித்த "ஜீவித யாத்ரா" என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, 1966ம் ஆண்டு சந்திரபாபு இயக்கி, நடித்த  "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற திரைப்படத்தின் மூலம்  அவர்  தமிழில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

பாலுமகேந்திராவுடன் ஷோபா

1978 ஆம் ஆண்டு, இயக்குநர் கே.பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முள்ளும் மலரும் படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றிய பாலுமகேந்திரா, ஷோபாவின் திறமையாலும், அழகாலும்  ஈர்க்கப்பட்டார். அவர் இயக்கிய கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி படங்களில் ஷோபாவை கதாநாயகியாக நடிக்கவைத்தார். இருவருக்கும் இருந்த நட்பு ஒரு கட்டத்தில் காதாலாக மலர்ந்தது. 

பாலுமகேந்திரா ஷோபாவின் பக்கத்து வீட்டுக்காரர். தனது மனைவி அகிலாவுடன் ஷோபாவின் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த பழக்கம் ஷோபாவை தனது கன்னட திரைப்படமான கோகிலாவில் நடிக்க  வழிவகுத்தது. பாலுமகேந்திர ஆரம்பத்தில் ஷோபாவை தனது மகள் என்று தான் சொல்லிக்கொண்டு இருப்பார் என்று ஷோபாவின் தயார் குறிபிட்டுள்ளார். ஆனால், திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சியான செய்தி அவருக்கு கிடைத்தது, அதை தொடர்ந்து சில மாதங்களில் ஷோபாவின் தற்கொலை செய்தியும் கிடைத்தது. 

தனது மகளுக்கு நீதி வழங்குமாறு தமிழக ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார் ஷோபாவின் தாயார். அவரது மனுவை விசாரித்து, காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஷெனாய் விசாரணையைத் தொடங்கினார். ஷோபாவின் உடற்கூறு ஆய்விற்குப் பிறகு அது தற்கொலைதான் என்று உருதிசெய்யபட்டது. ஆனால், ஷோபாவின் மரண வாக்குமூலத்தில் பாலுமகேந்திரா தன்னை விட்டு எப்படி அவரது முதல் மனைவியிடம் செல்லலாம் என்று கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

பாலுமகேந்திராவின் அறிக்கை 

இதை தொடர்ந்து பாலுமகேந்திர வெளியிட்ட அறிக்கையில், “நான் ஷோபாவை செல்லமாக அம்மு என்று தான் அழைத்துவந்தேன், நான் அவளைச் முதலில் சந்தித்தபோது என்னை அங்கிள் என்று தான் அழைப்பாள். அந்த அன்பான குழந்தைக்கு பொது அறிவை தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் ஆர்வமாக இருந்தேன். அதனால் பல்வேறு புத்தகங்களைக் பரிந்துரைத்தேன். ஒரு நல்ல கலைஞராக இருப்பதற்கு என்ன தேவை என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். எங்கள் நெருக்கத்தைப் பார்த்து வதந்திகள் பரவியிருந்தன, ஆனால் நாங்கள் அந்தச் செய்தியை குப்பை என்று கண்டித்தோம். ஆனால், விதியின் விளையாட்டு, எங்கள் உறவில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை வளர்த்து, அன்பை உணர்ந்தோம். இதையடுத்து ஷோபா என்னை திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். கடவுள் சாட்சியாக, நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். மெட்ராஸில் ஒரு வீடு எடுத்து ஒன்றாக வாழ ஆரம்பித்தோம். அம்மு மிகவும் பிடிவாதம் கொண்டவள். நான் என் முதல் மனைவியிடம் செல்லும்போது என்னிடம் அடிக்கடி சண்டையிடுவார்” என்பது பாலு மகேந்திரா தரப்பு பதில். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஷோபா திடீரென தன் வாழ்கையில் தோன்றி மறைந்த சம்பவத்தின் தாக்கம்தான் மூன்றாம் பிறைக்கான கதைக்களத்தை உருவாக்கியது என்று கூறியுள்ளார் பாலுமகேந்திரா. 

சி.பி.சி.ஐ.டி. அதிகாரியின் வாக்குமூலம்

இந்த புதிருக்கு மற்றுமொரு திருப்பம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் ரூபத்தில் வந்தது. 2020 ஆம் ஆண்டு வெளிவந்த 'A Road Well Travelled', என்ற புத்தகத்தில் நடிகை ஷோபா வழக்கை தற்கொலையில் இருந்து கொலையாக மாற்ற முன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் எப்படி தீவிர முயற்சியில் ஈடுபட்டார் என்பதை விரிவாக தொகுத்துள்ளார். 

“ஷோபா திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா மீது காதல் கொண்டிருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் வாழ்ந்து வந்தார். பல வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு அவர் திருமணம்  செய்ய மறுத்ததைத் தொடர்ந்து, ஷோபா  வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தீவிர நடவடிக்கையை எடுத்தார்” என்று ராகவன் தனது புத்தகத்தில் குறிபிட்டுள்ளார். மேலும், சில சர்ச்சையின் காரணமாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விரைவாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. பாலு மகேந்திராவால்  ஷோபா  கொலைசெய்யப்பட்டு  பின்னர் தூக்கிலிடப்பட்டார் என்ற வதந்தி முற்றுப்புள்ளிக்கு வந்தது. ஆனால், இது ஒரு கொலை என்று எம்.ஜி.ஆர் எப்படியோ நம்பிவிட்டார். பாலுமகேந்திராவை தீர்த்துக் கட்ட அவருக்கு நோக்கம் இருபதாகவும், அவரை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இது ஒரு கொலை என்று சந்தேகிக்க எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை, என்று ராகவன் குறிபிட்டுள்ளார்.

“எம்.ஜி.ஆர் தனது கோட்பாட்டை நிரூபிக்க பலமுறை என்னை அழைத்தார்,” என்று ராகவன் கூறுகிறார். “ராமாவரம் தோட்டத்திற்கு  சென்றது எனக்கு நினைவிருக்கிறது. பல மூத்த அதிகாரிகளும் அழைக்கப்பட்டனர். வெள்ளைநிறக் கைக்குட்டையைப் பயன்படுத்தி, ஷோபா எப்படி கொலை செய்யப்பட்டார், பின்னர் எப்படி தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்பதை எம்ஜிஆர் எனக்குக் நடித்து காட்டுவார்.” எனது இறுதி முடிவுகளுக்கு வரும்போது எம்.ஜி.ஆரின் கோட்பாட்டை கண்டிப்பாக மனதில் எடுத்துக்கொள்வேன் என்ற எனது வாக்குறுதியுடன் அங்கிருந்து விடைபெற்றேன். இது  சில மாதங்கள் நீடித்தது, முடிவில் எம்.ஜி.ஆர் மிகவும் ஆத்திரமடைந்து  விரக்தியடைந்து என்னை அழைப்பதை நிறுத்தினார்”.
 
“எம்.ஜி.ஆரின் கதையை நம்பி, அவரது மனதில்  இடம் பெறுவதற்காக எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் நினைத்திருந்தால், நீதிமன்றத்தில் கடும் சிக்கலில் சிக்கியிருப்பார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமான மூத்த காவல்துறை அதிகாரி கே.மோகன்தாஸ், பாலு மகேந்திராவுக்கு எதிரான குற்றச்சாட்டையாவது நான் தூண்ட வேண்டும் என்று என்னிடம் மல்லாடினார். எம்.ஜி.ஆர் மற்றும் மோகன்தாஸ் இருவரும் என் மீது எரிச்சலடைந்த நிலையில், சி.ஐ.டியில் எனது நாட்கள் எண்ணப்பட்டன” என்று ராகவன் எழுதிஉள்ளார். இறுதியில், இந்த பரபரப்பான ஷோபா வழக்கு ராகவனை  சிபி.சிஐடியில் இருந்து வெளியேற வழிவகுத்தது.

யார் சரி, தவறு என்பது எங்கள் நோக்கமில்லை, இப்படி பட்ட ஒரு நிகழ்வு பல கோட்பாடுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்து அன்று முதல் இன்று வரை ஒரு பேசு பொருளாகவும் விவாதபொருளாகவும் தொடர்கிறது, இன்னனமும் தொடரும்.