மகளிர் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்திய சுற்றுப்பயணம்
வரும் 9 ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்
இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குகிறார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பூஜா வஸ்ட்ராக்கர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
இரண்டு மைதானங்கள்
டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் போட்டிகள் டிசம்பர் 11, 14, 17, 20 ஆகிய தேதிகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் டி ஒய் பட்டில் மற்றும் CCI பிரபோர்ன் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இந்திய மகளிர் அணி பட்டியல்
இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேனுகா சிங் தாகூர், மேக்னா சிங், அஞ்சலி ஷர்வானி, தேவிகா வாய்ட்யா, எஸ் மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹார்லின் டியோல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.