Tamil News
Tamil News
Friday, 02 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்க இருக்கின்றன.

ஃபிபா உலகக்கோப்பை

உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரான ஃபிபா உலகக்கோப்பை கடந்த நவ.20 தேதி தொடங்கியது. இந்த உலகக்கோப்பை தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாக் அவுட் சுற்றுகள்

ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாக் அவுட் சுற்று அணிகள்

  1. நெதர்லாந்து
  2. அமெரிக்கா
  3. அர்ஜென்டினா
  4. ஆஸ்திரேலியா
  5. ஜப்பான்
  6. குரேஷியா
  7. பிரேசில்
  8. தென் கொரியா
  9. இங்கிலாந்து
  10. செனெகல்
  11. பிரான்ஸ்
  12. போலந்து
  13. மொராக்கோ
  14. ஸ்பெயின்
  15. போர்ச்சுக்கல்
  16. ஸ்விட்சர்லாந்து

இந்த அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. தினமும் இரண்டு நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முறையே இரவு 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளன.

யார் யாருடன் மோதல்

அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா

ஜப்பான் - குரேஷியா

பிரேசில் - தென் கொரியா,

இங்கிலாந்து - செனெகல்

பிரான்ஸ் - போலந்து

மொராக்கோ- ஸ்பெயின்

போர்ச்சுக்கல் - ஸ்விட்சர்லாந்து