Tamil News
Tamil News
Sunday, 04 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “தளபதி 67” படத்தின் பூஜை இன்று எந்தவித அறிவிப்புமின்றி சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. 

மாஸ்டர்

மாநகரம், கைதி படங்களின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப்படம் கமல்ஹாசன் கெரியரிலேயே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸில் அடுத்து என்ன படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளது. 

மீண்டும் விஜயுடன் கூட்டணி

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் இணைகிறார் தளபதி விஜய். அதாவது, விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67 ” படத்தினை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார். தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.  

சத்தமில்லாமல் நடந்த பூஜை 

இந்நிலையில், விஜய் – லோகேஷ் இணையும் தளபதி 67 படத்திற்கான பூஜை இன்று(டிச. 05) சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த பூஜையில், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ், 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்  லலித் குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்னர். 

பூஜை ப்ரோமா

இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜையில் ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை யாரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து வெளியிட கூடாது என்று கண்டிசனும் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குட்டி டீசருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரசிகர்கள் ஏமாற்றம்

தளபதி 67 படத்தின் பூஜை குறித்து படக்குழு போட்டுள்ள கண்டிஷன்களால் புகைப்படங்கள் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.