Tamil News
Tamil News
Monday, 05 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

கால்பந்து உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே இன்றைய கால்பந்து வீரர்களின் ரோல்மாடலாக திகழ்ந்து வருகிறார். பிரேசில் அணி 1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாகியிருந்தார். 81 வயதான பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் சிறிய கட்டியிருப்பது கண்டறியப்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பீலேவுக்கு ஹீமோதெரபி சிகிச்சை கடந்த இரு ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது.

மூச்சு விடுவதில் சிரமம்

இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாவ் பாலோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெருங்குடலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

பிரார்த்திக்கும் ரசிகர்கள்

தொடர் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வரும் பீலேவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பீலேவுக்கு ஏற்பட்ட தொடர் உடல்நலக்குறைவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கான ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பீலேவுக்கு பிரேசிலில் மட்டுமல்லாது உலகம் முழுக்க கால்பந்து ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் பிலே விரைந்து குணமடைய தங்களது விருப்பதை தெரிவித்து வருகின்றனர்.