Tamil News
Tamil News
Monday, 05 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

இந்தியா மற்றும் வங்க தேசம் இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. 

இந்தியா - வங்கதேச தொடர் 

இந்திய அணி வங்க தேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு  மூன்று ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஏற்கெனவே டி20 உலக கோப்பை தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி அதன் பிறகு நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் 1 போட்டியில் நியூஸிலாந்தும் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதாலும், நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். வங்க தேச தொடரிலாவது இந்தியா வெற்றிபெறும் என நம்பிய ரசிகர்களுக்கு முதல் போட்டியே அதிர்ச்சியாக இருந்தது. 

பேட்டிங்கில் சொதப்பல்

இந்நிலையில் கடந்த 4ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 70 பந்துகளுக்கு 73 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியிலும் வெறும் 23 ரன்களில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் விராட் கோலியும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் 24, தவான் 7, வாசிங்டன் சுந்தர் 19 என அடுத்தடுத்த வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

வங்கதேசம் வெற்றி 

187 ரன்கள் எடுத்தால் வெற்றி எனற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 46 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. வங்க தேச அணி சார்பாக தொடக்க வீரர் லிண்டன் தாஸ் 41, ஹசான் மிராஸ் 38 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியும் குறைவான இலக்கு என்பதால் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இரண்டாவது ஒருநாள் போட்டி

இந்நிலையில் 3 போடிகள் கொண்ட தொடரில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. வங்க தேச அணியும் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியோடு களமிறங்குகிறது. 

டாஸ் வென்ற வங்கதேசம்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.