Tamil News
Tamil News
Tuesday, 06 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

கொலம்பியாவில் உள்ள பொகோட்டாவில் சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான பளுதூக்கும் வீரர். வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்றார். 

சீன வீராங்கனையை எதிர்கொண்ட மீராபானு

சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை எதிர்கொண்ட மீராபாய் சானு அவரை வீழ்த்தி மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.  இந்த பிரிவில் மற்றொரு சீன வீராங்கனையான ஜியாங் ஹுய்ஹுவா, (206 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 

இடது மணிக்கட்டில் காயம்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு பெற்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 2017-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட நிலையில் 200 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.