Tamil News
Tamil News
Tuesday, 06 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

நடிகர் சிம்புவின் திருமணம் விரைவில் நடைபெறும் என்று அவரது தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளது சிம்புவின் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.


சிம்பு எனும் சிலம்பரசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகிய இவர், தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒர் இடத்தை பிடித்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சிம்புவுக்கு ஒரு மிகப்பெரிய ரீ எண்ட்ரியாகவே மாறியது.

 

காதல் சர்ச்சை

சிம்புவை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் குறிப்பாக காதல் சர்ச்சைகள் அவரை சுற்றி இருந்துக் கொண்டே இருக்கும். வல்லவன் படத்தில் நயனுடன் நடித்த பிறகு ஆரம்பமான இவரது காதல் சர்ச்சை, நயன்தாராவிற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்ற பிறகு அடங்கியப்பாடு இல்லை. இடையில் ஹன்சிகாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. தற்போது ஹன்சிகாவுக்கும் திருமணமாகியது. ஆனால், சிம்புவிற்கு மட்டும் திருமணம் எப்போது நடக்கும் என்பது அவருக்கே தெரியவில்லை. ஆனால், சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

தரிசனம் மேற்கொண்ட டி.ஆர்

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர்,  காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி.ராஜேந்தர் தனது மகனும் நடிகருமான சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மேற்கொண்ட அவர், 12 திருவிளக்கு ஏற்றி கோவில் நந்தி பகவானிடம் தனது வேண்டுதலை மனமுருகி வேண்டி கொண்டார்.

மறு பிறவி எடுத்த டி.ஆர்

இதனையடுத்து செய்தியாளர்களை  சந்தித்த டி.ராஜேந்தர், "நான் மறுபிறவி எடுத்துள்ளேன். கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து எனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம்  கோரிக்கையாக வைத்தேன். அதன்பின்னர் சுமுகமாக அப்பிரச்சனை தீர்ந்தது” என்றார். 

சிம்புவுக்கு பிடித்த திருமகள்

மேலும், “எனக்கும் எனது மனைவிக்கும் பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள்  அனைவரும் ஆதரவுடன் விரைவில் நடக்கும்  எதிர்பார்க்கிறேன்" என டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.