Tamil News
Tamil News
Wednesday, 07 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குஜராத் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் என மும்முனை போட்டி நடைபெற்றது. 

கருத்துகணிப்பு முடிவுகள்

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவே ஆட்சியை தக்க வைக்கும் என வெளியானது. பாஜக -128 முதல் 140 வரையும், காங்கிரஸ் 31 முதல் 43 வரை, ஆம் ஆத்மி 3 முதல் 11 வரையிலான இடங்களை பிடிக்கலாம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. 

நிஜமான கருத்து கணிப்பு முடிவு 

கருத்துக்கணிப்பு முடிவுகளைப் போலவே தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதுவரை வெளியான முன்னணி நிலவரத்தின் படி, பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

தேர்தலுக்கு முன் பாஜக

தொடர்ந்து 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. இதில் தற்போதைய பிரதமர் மோடி தொடர்ந்து 3 முறை குஜராத் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் இந்த முறை குஜராத் வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர், குஜராத்தில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடியது. பல முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கிடைக்காததால் பலர் சுயேட்சைகளாக போட்டியிட்டனர். இதனால் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் வேட்பாளர் தற்கொலை முயற்சி

இந்நிலையில் காந்திதாம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்கு இயந்திரங்களில் சீல் வைக்கப்படவில்லை எனவும், பல வாக்கு இயந்திரங்களில் வாக்கு மைய அதிகாரியின் கையெழுத்து இல்லையென காங்கிரஸ் வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்கு எண்ணும் மையத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.