Tamil News
Tamil News
Friday, 09 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

வங்க தேசம் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக ஆடி வருகின்றனர். 

இந்தியா - வங்கதேச தொடர் 

இந்திய அணி வங்க தேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு  மூன்று ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஏற்கெனவே டி20 உலக கோப்பை தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி அதன் பிறகு நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் 1 போட்டியில் நியூஸிலாந்தும் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதாலும், நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். வங்க தேச தொடரிலாவது இந்தியா வெற்றிபெறும் என நம்பிய ரசிகர்களுக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஏமாற்றத்தையும் தோல்வியையுமே பதிலாக அளித்தது. வங்க தேசம் அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

மூன்றாவது ஒருநாள் போட்டி

இந்நிலையில் ஏற்கெனவே வங்கதேச அணி தொடரை கைப்பறியதால் இன்றையப் போட்டி சம்பிரதாய போட்டியாகவே பார்க்கப்பட்டது. இதனால் கடந்த 2 போட்டிகளுக்கு இருந்த ஆர்வத்தைவிட இந்தப்போட்டியில் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து காணப்பட்டது. ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது போட்டு நடைபெறும் மைதானத்தை பார்க்கும்போதே தெரிகிறது. கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கும் நிரம்பி வழிந்தது, ஆனால் இன்றைய போட்டி நடைபெறும் ஷாகுர் அகமது சௌத்ரி மைதானம் ரசிகர்களின் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்படுகிறது.  

ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு

கடந்த போட்டியில் பீல்டிங் செய்யும்போது கை விரலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் பாதி போட்டியிலேயே பெவிலியன் திரும்பினார் ரோஹித் ஷர்மா. பின்னர் பேட்டிங் செய்யும்போது 9வது வீரராக களமிறங்கு 28 பந்துகளுக்கு அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்காக போராடினார். காயத்தால் போராடியும் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. காயம் காரணமாக இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மாவுக்கு 

அணியில் மாற்றம் 

காயம் காரணமாக ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், பந்து வீச்சாளர் தீபக் சாகருக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷணுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் எடுத்த இஷான் கிஷண்

தொடக்க ஆட்டக்காரர்களாக் இஷான் கிஷான் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் இறங்கினர். வழக்கம்போல வந்த வேகத்தில் 8 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்து ஷிகார் தவான் பெவிலியன் திரும்ப, விராட் கோலி இஷானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடி வந்த நிலையில் இஷான் கிஷண் 50 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய இஷான் தனது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிவர மற்றொரு பக்கத்தில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதம் அடித்தார். இஷானும் 126 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். மொத்தம் 131 பந்துகளுக்கு, 10 சிக்ஸ் 24 பவுண்டரி அடித்த இஷான் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 37 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை இழந்து 314 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. விராட் கோலியும் தனது பங்கிற்கு சதத்தை நெருங்கி வருகிறார்.