Tamil News
Tamil News
Monday, 12 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இரத்ததானம் செய்து, ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்ம்குதல் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 

தலைவர்கள் வாழ்த்து 

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!, நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்”. என தெரிவித்துள்ளார். 

அதைப்போல சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த்  அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரு.ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என வாழ்த்தியுள்ளார். 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “Happy birthday THALAIVA