Tamil News
Tamil News
Sunday, 11 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு மலையாள நடிகர் மம்முட்டி தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி

ரசிகர்களால் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் , இந்திய திரைப்படத் துறையில் தன் ஸ்டைல் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் தன் நண்பரின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, 1976ல் “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே ஆண்டில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது.

1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார்.

பட்டித்தொட்டி எங்கும் கலக்கிய தளபதி

தமிழ் சினிமாவின் உச்சபட்ச ஸ்டார் ரஜினி, மலையாள படவுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரையும் நட்புக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கினார் இயக்குநர் மணிரத்னம். ரஜினி என்ற மாஸ் ஹீரோவை இப்படியும் மாற்றிக்காட்டலாம் என்று தமிழ்சினிமாவிற்கு சொன்ன படம் தளபதி. ரஜினியின் ஹேர் ஸ்டைலும், அவரது உடையமைப்பும் வேறு ஒரு ரஜினியை அறிமுகம் செய்துவைத்தது.  சூர்யாவான ரஜினிக்கும், தேவாவான மம்முட்டிக்கும் மலரும் நட்பானது எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் ஈர்ப்பு விதியை போன்றது. ஆம், எங்கேயோ பிறந்த சூர்யா, ரயில் வண்டியில் பயணமாகி, ஒரு பாட்டியால் வளர்க்கப்பட்டு, தேவா எனும் நட்பதிகாரத்தில் ஆன்மாவாக கலக்கும் விதமே நம்மை ஈர்க்கும். இத்திரைப்படம் வந்து 31 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் இன்றும் நட்பின் இலக்கணமாக இருக்கும் படங்களுள் முன்னணி வகுக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா

இந்நிலையில், தன் 73வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த். ஒரு சிறந்த ஆண்டு முன்னால் உள்ளது. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் இருங்கள்...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா” என்று மம்முட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.